முள்ளங்கி குழம்பு

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - ஒரு கொத்து

வெங்காயம் - பாதி

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

தேங்காய் - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முள்ளங்கியை அலசிவிட்டு, வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். அதில் முள்ளங்கியை சேர்த்து வதக்கவும்.

இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து பிரட்டிவிட்டு, காய் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

இன்னொரு கடாயில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, தேங்காய், கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

முள்ளங்கி நன்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் உப்பு சரிப்பார்த்து, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

இது சாதத்துடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். சப்பாத்திக்கும் பொருத்தமான சைட் டிஷ்.