முளைகட்டிய வெந்தய குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
முளைகட்டிய வெந்தயம் - 2 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 1/2 கப்
உரித்த பூண்டு - 10
சின்ன வெங்காயம் அரைத்த விழுது - 1 மேசைக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
அரிசி கழுவிய நீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க:
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சரிசி - 1 தேக்கரண்டி
வெள்ளை எள் - 1 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - 5 (காரத்திற்கேற்ப)
முளைகட்டிய வெந்தயம் - 1 மேசைக்கரண்டி( கொடுத்துள்ள அளவில் பாதியை)
கறிவேப்பிலை - 10 இலைகள்
தாளிக்க:
நல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
அரிசி கழுவிய நீரில் புளியை ஊறவைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டை தோலுரிக்கவும்.
சிறிது சின்ன வெங்காயத்தை அரைத்து விழுதாக்கி கொள்ளவும். வறுத்து பொடிக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து பொடிக்கவும்.
தேங்காய் துருவலையும் லேசாக வதக்கி விழுதாக அரைக்கவும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின் மீதி பொடிக்காமல் உள்ள முளைகட்டிய வெந்தயத்தை அதே எண்ணெயில் போட்டு வதக்கி பின் சின்ன வெங்காய விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின் உரித்த சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி பின் ஊறவைத்த புளியை கரைத்து ஊற்றி உப்பு போட்டு நன்றாக கொதிக்கவிடவும்.
பச்சை வாசனை போக கொதித்ததும், பொடித்த தூளை போட்டு நன்றாக சுண்டும் வரை கொதிக்க விடவும். பின் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி நன்றாக குழம்பு சுண்டி எண்ணெய் மேலே மிதக்கும்வரை கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்