முளைகட்டிய வெந்தய குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
முளைகட்டிய வெந்தயம் – 2 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
தக்காளி - 1
உரித்த பூண்டு – 10
புளி – எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி- 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிட்டிகை
கறிவேப்பிலை – 10 இலைகள்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
அரிசி கழுவிய நீரில் (1 கப்) புளியை ஊறவைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
தக்காளி பொடியாக நறுக்கவும் பூண்டை தோலுரிக்கவும்.
தேங்காயுடன் ஒரு டேபிள்ஸ்பூன் முளைகட்டிய வெந்தயத்தை அரைத்து விழுதாக வைக்கவும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு நிறம் மாறும் வரை வதக்கி பின் மீதி உள்ள முளைகட்டிய வெந்தயத்தை அதே எண்ணெயில் போட்டு வதக்கவும். பிறகு
தக்காளி, பூண்டை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கி அதிலேயே சாம்பார்பொடியை போட்டு வதக்கி விட்டு ஒரு கப் நீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிடவும். பின் ஊறவைத்த புளியை கரைத்து ஊற்றி உப்பு போட்டு நன்றாக கொதிக்கவிடவும். பச்சை வாசனை போக கொதித்ததும், பெருங்காயத் தூளை போட்டு நன்றாக சுண்டும்வரை கொதிக்க விடவும். பின் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி நன்றாக குழம்பு சுண்டி எண்ணெய் மேலே மிதக்கும் வரை கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.