முருங்கைக்கீரை குழம்பு (2)
0
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை - 1 கப்
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
தக்காளி - 1
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை (கொத்து போட்டது எனில் நன்றாக இருக்கும்) வைத்து நீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன், பருப்பை சேர்த்து வேக வைக்கவும்.
பாதி வெந்தவுடன், பூண்டு, தக்காளி இவைகளையும் சேர்த்து வேகவைக்கவும்.
நன்கு பூப்போல் பருப்பு வெந்தவுடன் கீரையை சேர்க்கவும். பின் மிளகாய் தூளை சேர்க்கவும். சுவை பார்த்து உப்பையும் சேர்க்கவும்.
பின் கீரையின் பசுமை நிறம் மாறாமல், வெந்தவுடன் எடுத்து கடைந்து தாளித்து கொட்டி வைக்கவும்.
குறிப்புகள்:
வெறும் கடுகு, உளுந்து, தாளிப்பை விட, வெங்காய வடகம் இருந்து தாளித்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதே போல் கொத்து போட்ட மண்சட்டியில் செய்தாலும் சுவை சூப்பராக இருக்கும்.