முருங்கைக்காய் குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 2
வெங்காயம் (சிறியது) - 10
பூண்டு - 8 பல்
தக்காளி - 3
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 4 மேசைக்கரண்டி (அல்லது) 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 3 சில்
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி (தாளிக்க)
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரியவிட்டு, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
2 இன்ச் அளவிற்கு முருங்கைக்காயை நறுக்கி போட்டு வதக்கி, அதில் சாம்பார் பொடி (அல்லது) மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள் உப்பு போட்டு 3 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவேண்டும்.
குழம்பு நன்கு கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.