முருங்கைக்காய் குழம்பு

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 2

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பூண்டு - 4 பல்

புளி - எலுமிச்சை அளவு

சாம்பார் பவுடர் - 2 1/2 தேக்கரண்டி

ரெடிமேட் தேங்காய் பால் - 4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிதளவு

மிளகாய் வற்றல் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முருங்கைக்காயை ஓர் அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டை தோலுரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, மிளகாய்வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பிறகு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் முருங்கைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு சாம்பார்பொடி போட்டு மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு புளித்தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

காய் நன்கு வெந்து தண்ணீர் ஓரளவு வற்றியவுடன் தேங்காய்பால் விட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை உடனே அணைத்து விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

ரெடிமேட் தேங்காய் பால் கிடைக்கவில்லை எனில் தேங்காயை துருவி தண்ணீர் விட்டு வரும் முதல் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளவும். 2 வது 3வது பாலை ரசத்திற்கு உபயோகிக்கலாம்.