முருங்கைக்காய் இன் சோய் மில்க்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 2

சின்ன வெங்காயம் - 15

பூண்டு - 8

தக்காளி - 2

குழம்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கருவேப்பிலை, மல்லி இலை - சிறிது

சோயா பவுடர் - 2 மேசைக்கரண்டி

புளிகரைசல் - 5 மேசைக்கரண்டி

எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, சீரகம் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய், வெங்காயம்,தக்காளியை நறுக்கிவைத்துக் கொள்ளவும்.

புளிக்கரைசல்,தாளிக்கும் பொருட்கள் தவிர மீதம் உள்ளவற்றை அடி கனமான பாத்திரத்தில் போட்டு வேக விடவும்.

முருங்கைக்காய் நன்றாக வெந்தவுடன் சோயா பவுடரை நீரில் கரைத்து ஊற்றவும்.புளிக்கரைசலையும் ஊற்றவும்.

10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் தாளித்து மல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இட்லி,தோசைக்கும் நன்றாக இருக்கும்.

புளி சேர்க்காமல் செய்தால் சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.