முடக்கற்றான்கீரை குழம்பு
தேவையான பொருட்கள்:
முடக்கற்றான் கீரை - 1 கப்
பூண்டு - 5 பல்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்து, கடலைபருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வறுத்து பொடிக்க:
மிளகாய் வற்றல் - 3
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
முடக்கற்றான் கீரையை சுத்தம் செய்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பூண்டை தோல் நீக்கவும். புளியை ஊற வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வறுத்து பொடிக்க வேண்டிய அனைத்தையும் சேர்த்து வறுக்கவும். பின் மிக்ஸியில் பொடித்து தனியாக வைக்கவும்.
அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். தாளித்த பின் தனியா தூள் சேர்க்கவும்.
இதில் புளிக்கரைசல், பூண்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்த கீரை சேர்க்கவும்.
நன்றாக கலந்து விட்டு பொடித்த பொடியை சேர்க்கவும்.
குழம்பை நன்றாக கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
கொடியின் முன் பகுதியில் உள்ள கீரைகளை பயன்படுத்தினால் கசப்பு தன்மை இருக்காது.
சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.