மிளகு குழம்பு (5)
0
தேவையான பொருட்கள்:
புளி - 50 கிராம்
மிளகு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
மிளகாய் வத்தல் - 6 எண்ணிக்கை
பெருங்காயம் - சிறிதளவு
நல்லெண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணைய் விட்டு சிறிது சிவக்கவறுத்தபொடி செய்து கொள்ளவும். (புளி தவிர்த்து மேற்க்கூறிய பொருட்கள்)
புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும்
50 மில்லி நல்லெண்ணையை சூடாக்கி கடுகு, உளூத்தம் பருப்பு தாளித்து,
இதனுடன் புளி கரைசலையும், சிவக்க வறுத்தப்பொடியையும் சேர்த்து
கொதிக்கவிட்டு 1 1/2 கப் ஆகும் வரை சுண்ட விட்டு இறக்கி பரிமாறவும்.