மிளகு குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1

பூண்டு - 10 பல்

தக்காளி - 1

புளி - தேவைக்கேற்ப

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகு, சீரகம், தனியா, உளுந்து - 1 தேக்கரண்டி

எண்ணெய், கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க

ஆல் பர்பஸ் பொடி - 1 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

ஆல் பர்பஸ் பொடிக்கு:

கடுகு - 25

கிராம் வெந்தயம் - 25

கிராம் சீரகம் - 50 கிராம்

கடலை பருப்பு - 50 கிராம்

வேர்க்கடலை - 50 கிராம்

காய்ந்த மிளகாய் - 50 கிராம்

வெள்ளை எள் - 50 கிராம்

மிளகு தூள் - 50 கிராம்

கறிவேப்பிலை - 4 கொத்து

(காய்ந்தது) தனியா - 50 கிராம்

பெருங்காயம் - 15 கிராம்

செய்முறை:

வெங்காயம், தக்காளி ஆகியவற்றை அரிந்து வைத்துக் கொள்ளவும். புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், தனியா, உளுந்து, பூண்டு சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.

ஆறியதை லேசாக தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.

அதே வாணலியில் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.

எண்ணெய் பிரிந்து வரும்போது, புளி கரைசலை ஊற்றவும்.

நன்றாக கொதிக்கும் போது, மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது அரைத்து வைத்த விழுதை போட்டு கொதிக்க வைக்கவும்.

கடைசியாக ஆல் பர்பஸ் பொடி, கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.

ஆல் பர்பஸ் பொடி:

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து கல் தூசி பார்த்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இவை அனைத்தையும் வெறும் வாணலியில் போட்டு தீயை மிதமாக வைத்து வறுத்து ஆற வைக்கவும்.

ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.

அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் பெருங்காயம் சேர்த்து காற்று புகாத பாட்டிலில் வைக்கவும்.

குறிப்புகள்: