மணத்தக்காளி குழம்பு
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி வற்றல் - சிறிது
வெங்காயம் - 5 (அளவிற்கு ஏற்ப கூட்டலாம்)
பூண்டு - 4 பல்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
புளி - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
ஆல் பர்பஸ் பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
புளியை தண்ணீர் ஊற்றி கரைக்கவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதில் மணத்தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
அதன் பின்னர் நறுக்கின வெங்காயம், பூண்டு, சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதனுடனே தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்கு வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றவும்.
நன்கு கொதித்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
மிளகாய் தூள் வாசம் போனதும், ஆல் பர்பஸ் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதித்து குழம்பு கெட்டியாக ஆனதும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.