பொரிச்ச குழம்பு (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 100 கிராம்

கத்தரிக்காய் - 2

கேரட் - 1

முருங்கைக்காய் - 1

வாழக்காய் - 1

தேங்காய் - அரை மூடி

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவும். பாசிப்பருப்பை நன்கு குழைய வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

தேங்காய், மிளகு, சீரகம் மூன்றையும் ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

காய்கள் வெந்ததும் பருப்பையும் அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்கவிடவும்.

பிறகு ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து குழம்பில் ஊற்றவும்.

குறிப்புகள்: