பொரிச்ச குழம்பு
0
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
முருங்கைக்காய் - 1
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
காய்ந்த மிளகாய் - 6
சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 3 பல்
சின்ன வெங்காயம் - 11
தாளிக்க:
நெய் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
பாசிப்பருப்பை அலசிவிட்டு முருங்கைக்காய் சேர்த்து வேக வைக்கவும்.
காயும், பருப்பும் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நெய்யில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து இறக்கி எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.