பேகன் பர்த்தா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 4

தக்காளி - 4

பூண்டு - 5 பல்

இஞ்சி - சிறிய துண்டு ஒன்று

பச்சரிசி - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 மேசைக்கரண்டி

சீனி - 1/2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி

தனியாப்பொடி - 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லித் தழை - கொஞ்சம்

சோம்பு - 1 மேசைக்கரண்டி

கசகசா - 1 மேசைக்கரண்டி

பட்டை - சிறிய துண்டு ஒன்று

ஏலக்காய் - 1

கிராம்பு - 1

புளி - நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும்.

பச்சரிசி, கடுகு, வெந்தயம் மூன்றையும் எண்ணெய் விடாமல் வறுக்கவும்.

கத்திரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வாணலியில் 2 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கத்திரிக்காய் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, சோம்பு, கசகசா, கிராம்பு, பட்டை, வறுத்த பச்சரிசி, கடுகு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து மசாலாவாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் அரைத்த மசாலா விழுதை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும். புளியை கெட்டியாக கரைத்து விடவும்.

மிளகாய் தூள், தனியாத்தூள் போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாக கொதித்தவுடன் கத்திரிக்காய் துண்டுகளை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

கடைசியில் கொத்தமல்லித் தழைகளை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: