பூண்டு வெங்காய காரக் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உரித்த சின்ன வெங்காயம் - 100 கிராம்

உரித்த பூண்டு பல் - 50 கிராம்

தக்காளி - 4

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

புளி - சிறிய நெல்லிக்காயளவு

எண்ணை - 5 மேசைக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

வர மிளகாய் - 10

மல்லி - 2 தேக்கரண்டி

தேங்காய் - 2 மேசைக்கரண்டி

கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி

மிளகு - 10

செய்முறை:

முதலில் அரைக்க வைத்துள்ள சாமான்களை வாசனை வர வறுத்து விழுதாக அரைக்கவும்.

புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டி உப்பு, மஞ்சள் பொடி, அரைத்த விழுது சேர்த்து அரை லிட்டர் நீரில் கலக்கி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து மூன்று ஸ்பூன் எண்ணையை மட்டும் ஊற்றி வெந்தயம் தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

லேசாக சிவந்ததும் தக்காளி போட்டு வதக்கவும்.

எண்ணை பிரிய தொடங்கியதும் புளிக் கரைசலை ஊற்றி பதினைந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதித்து கெட்டியாகி எண்ணை மேலே மிதக்கத் தொடங்கியதும் இறக்கி விடவும்.

சிறிய வாணலியில் மீதமுள்ள இரண்டு ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: