பூண்டு குழம்பு (4)
0
தேவையான பொருட்கள்:
பூண்டு - 1 1/2 முழு பூண்டு (பல் அல்ல)
வெங்காயம் - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
செய்முறை:
பூண்டை உரித்து கொள்ளவும். நறுக்க வேண்டியதில்லை.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
தேங்காய் உடன் மிளகு சீரகத்தையும் தண்ணீர் சேர்த்து ஒரளவு கெட்டியாக அரைக்கவும்.
புளியை கரைத்து அரைத்தவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் பூண்டை வதக்கவும். பூண்டு நன்கு வதங்க வேண்டும்.
நன்றாக வதங்கியவுடன் கரைத்து வைத்துள்ளவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு திக்காக வந்ததும் இறக்கி பரிமாறவும்.