பூண்டு குழம்பு (2)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பூண்டு - 50 கிராம் (பெரியது)

சின்ன வெங்கயம் - 20

புளி -கொஞ்சம்

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

கருவேப்பிலை - சிறிது

மஞ்சள் தூள் - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பூண்டை தோல் எடுத்துவைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும்.

மிளகு, சீரகத்தை அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் சட்டியைவைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும், வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு போட்டு வதக்கவும்.

பின் புளிகரைசலில் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு போட்டு கலக்கி இதை வதங்கும் பூண்டு கலவையுடன் ஊற்றிகொதித்ததும் மிதமான தீயில் வைத்து குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: