பூசணிக்காய் மோர் குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் துண்டுகள் - 1 கப்
கெட்டி மோர் சற்று புளிப்புடன் - 2 கப்
தேங்காய்ப்பூ - 1/2 கப்
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
தக்காளி - 1
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
துவரம் பருப்பு, 3 மிளகாய் வற்றல், சீரகம் இவற்றை ஊற வைத்து, தக்காளி, தேங்காய்த் துருவலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பூசணிக்காய் துண்டங்களை சிறிய அளவு தண்ணீரில் சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும் அரைத்த விழுதினைப் போட்டு லேசாக கொதிக்கவிடவும்.
பிறகு மோரை ஊற்றி, பொங்கி வந்ததும் இறக்கி மீதமுள்ள உப்பை போடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, 2 மிளகாய் வற்றல், வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து குழம்பில் சேர்த்து பரிமாறவும்.