பூசணிக்காய் மோர் குழம்பு (1)
0
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 கப்
சின்ன வெங்காயம் - 3
சீரகம் - 1/4 தேக்கரண்டி
சோம்பு - 5
தயிர் - 3/4 கப் புளித்தது
தாளிக்க:
தேங்காய் எண்ணை - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 10
சின்ன வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 3
மோர் மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் பூசணிக்காயில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேக விடவும்
தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் சோம்பை அரைத்துக் கொள்ளவும்
பூசணிக்காய் பாதி வேகும் பொழுதே அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
பின்பு பூசணிக்காய் நன்கு வெந்ததும் தீயை அணைத்து விட்டு நன்கு புளித்த தயிர் சேர்த்து கலந்து விடவும்
பின்பு தாளிக்க கொடுத்துள்ளவற்றை வரிசையாக சேர்த்து தாளித்து கொட்டி பரிமாறவும்