புடலங்காய் குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய பிஞ்சு புடலங்காய் - 1
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் (நறுக்கிய) - 1/2
உள்ளி - 2 பல்
தேசிக்காய் (எலுமிச்சம்) சாறு - சிறிதளவு
மெட்ராஸ் கறித்தூள் - 1 தேக்கரண்டி
பசுப்பால் (ஆவின்பால்) - 3 கப்
தண்ணீர் - 3 கப்
அஜினோமோட்டோ - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை (தாட்சியை) வைத்து அதை சூடாக்கவும். பின்பு அதில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும்.
நல்லெண்ணெய் சூடானதும் நறுக்கிய புடலங்காயை அதில் போட்டு சுருள வதக்கிக் கொள்ளவும்.
புடலங்காய் ஒரளவு சுருள வதங்கியதும் அதனுடன் வெங்காயம், கடுகு, சீரகம்(சோம்பு), உள்ளி ஆகியவற்றை சேர்த்து சுருள வதக்கவும்.
ஒரளவு சுருள வதங்கியதும் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, மெட்ராஸ்கறித்தூள், அஜினோமோட்டோ ஆகியவற்றை சேர்த்து சுருள வதக்கவும்.
இவையாவும் சுருள வதங்கியதும் அதனுடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு வெந்ததும் அதனுடன் பசுப்பாலை (ஆவின்பாலை) சேர்க்கவும். பால் கொதித்து இவற்றுடன் சேர்ந்த பின்பு உப்பை போட்டு கலக்கி வேகவிடவும்.
இவையாவும் வெந்ததும் தேசிக்காய்(எலுமிச்சம்) சாற்றை பிழிந்து விடவும்.
பின்பு புடலங்காய் குழம்பு தயாராகிவிடும் அதை அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும். .
மெட்ராஸ்கறித்தூள் செய்ய: (இவையனைத்தையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.)
வெறும் மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகு, சீரகம், சோம்பு - தலா 1/4 தேக்கரண்டி
குறிப்புகள்:
அதன் பின்பு இதை சோற்றுடன் (சாதத்துடன்) பரிமாறவும்