பீர்க்கங்காய் பால் கடைசல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் - 1

பால் - 200 மில்லி

சீரகம் - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பீர்க்கங்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

பாலை ஊற்றி பீர்க்கங்காயை வேக வைக்கவும்.

பீர்க்கங்காய் வெந்தவுடன், உப்பு போட்டு மத்தால் நன்றாக மசித்து கொள்ளவும்.

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மசித்த பீர்க்கங்காயுடன் கல்ந்து 2 நிமிடம் அடுப்பில் வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: