பீர்க்கங்காய் குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
வரமிளகாய் - 4
பால் - 1/4 கப்
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
சீரகம், கொத்தமல்லி விதை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி இரண்டையும் சிறிதாக நறுக்கவும். பீர்க்கங்காயை தோல் சீவி விட்டு சிறிதாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கின பிறகு தக்காளியையும் அடுத்து பீர்க்கங்காயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் இரண்டு கப் தண்ணிர் ஊற்றி கொதிக்க விடவும். காய் நன்கு வெந்து விடும்.
பிறகு சீரகம், கொத்தமல்லி விதை இரண்டையும் மசித்துபோட்டு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவைக்கவும்.
இதனை மத்து கொண்டு கடையவும்(விரும்புவோர் செய்யலாம்). பிறகு பாலை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.