பீர்க்கங்காய் குழம்பு (1)
0
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் - 1 கப்
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது.
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய், பீர்க்கங்காய் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
பீர்க்கங்காய் வெந்த பின் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பரிமாறவும்.