பீர்க்கங்காய் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிப்பயறு - 250 கிராம்

பீர்க்கங்காய் - 1

சின்ன வெங்காயம் - 50 கிராம்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - 2 இனுக்கு

பூண்டு - 6 பல்

சீரகம் - 2 தேக்கரண்டி

தனியா - 1 தேக்கரண்டி

கடுகு, கடலைப்பருப்பு, எண்ணெய் - தாளிக்க

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து வைக்கவும். பச்சைமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, சீரகம், தனியா ஆகியவற்றை எடுத்து வைக்கவும்.

பீர்க்கங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.

பச்சைபயறை மிதமான தீயில் மணம் வரும் வரை வறுத்து சிறிது ஆறவிட்டு தண்ணீரில் நன்கு கழுவி வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சீரகம், தனியா ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

வதங்கியவுடன் தக்காளி மற்றும் பீர்க்கங்காய் போட்டு ஒருமுறை கிளறி விடவும்.

பிறகு கழுவிய பச்சைபயறை போட்டு 750 மி.லி தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 6 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஆவி அடங்கியவுடன் நன்றாக மத்தினால் மசித்துக் கொள்ளவும்.

கெட்டியாக இருந்தால் நீர் சேர்த்து கொதிக்க விடலாம். அடி்ப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

குறிப்புகள்:

சாதம், சப்பாத்திக்கு ஏற்றது. நெய் விட்டு சாப்பிடலாம்.