பாசிப்பயறு குழம்பு (1)





தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு - 1 கப்
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 8 (அல்லது) 10
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
புளியை ஊற வைத்துக் கரைத்து வைக்கவும்.
வெறும் கடாயில் பாசிப்பயறை வறுத்து, தண்ணீரில் நன்றாக அலசிவிட்டு, குக்கரில் போட்டு 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கிய அனைத்தையும் வேக வைத்த பாசிப்பயறுடன் சேர்த்து மஞ்சள் தூள், சாம்பார் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பச்சை வாசம் போகக் கொதிக்கவிடவும்.
பிறகு புளிக் கரைசலை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
ஜீரா ரைஸ், சப்பாத்தி மற்றும் வெள்ளை சாதத்திற்கு நல்ல ஜோடி இது.