பாசிப்பயறு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிப்பயறு - 1 கப்

முருங்கைக்காய் - 4

பச்சை மிளகாய் - 2

தக்காளி - 1

பூண்டு ‍- 5

பெருங்காயம் - சிறிது

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

சீரகத் தூள் - 1 தேக்கரண்டி

சோம்பு தூள் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

வெங்காயம் - 1 1/2

தேங்காய் துருவல் - 1/2 கப்

மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

பசு நெய் - 25 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாசிப்பயறை லேசாக வறுத்துக் கொள்ளவும். பின்பு கழுவி குக்கரில் போட்டு அதில் ஒரு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி போட்டு பூண்டு, பெருங்காயம் சேர்த்து 4 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

முருங்கைக்காயை நறுக்கி பாதி வெங்காயத்தை பொடியாக நறுக்கி வெந்த பருப்பில் சேர்க்கவும்.

அதில் மஞ்சள் தூள், சீரகத் தூள், சோம்பு தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

காய் நன்கு வெந்ததும் தேங்காயை அரைத்து குழம்பில் சேர்க்கவும்.

வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு தாளித்து வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். பின்பு அதில் மிளகாய்த் தூள் சேர்த்து கிளறி குழம்பில் கொட்டி கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: