பாகற்காய் குழம்பு (9)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 2

சின்ன வெங்காயம் - 10

தனியா - 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் -2

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/4 தேக்கரண்டி

பூண்டு - 2 பல்

தக்காளி - 1

தேங்காய் துறுவல் - 1/4 கப்

புளி - நெல்லிக்காய் அளவு

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

வெல்லம் - சிறிது

எண்ணை - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாகற்காயை கழுவி விதை நீக்கி பொடியாக நறுக்கவும்.

தக்காளி,வெங்காயம் இரண்டாக நறுக்கவும்.புளியை ஊறவைத்து கரைத்துவைக்கவும்.

வாணலியில் 1ஸ்பூன் எண்ணை ஊற்றி வெங்காயம் வதக்கி, தனியா,சீரகம்,மிளகு,காய்ந்தமிளகாய்,பூண்டு போட்டு வதக்கவும்.தக்காளி தேங்காய் சேர்த்து வதக்கி ஆறியவுடன் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

குழம்புவைக்கும் பாத்திரத்தில் 1ஸ்பூன் எண்ணை ஊற்றிகாய் போட்டு வதக்கவும்.காய் வதங்கியவுடன் புளித்தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள் போட்டு வேகவிடவும்.

காய் பாதி வெந்தவுடன் அரைத்தவற்றை ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேகவிடவும்.காய் வெந்தவுடன் வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும்.

வாணலியில் மீதி எண்ணை ஊற்றி வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் கொட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: