பாகற்காய் குழம்பு (8)
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 1
தாளிக்க:
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு
வதக்க:
பெரிய வெங்காயம் - 1
அல்லது சிறிய வெங்காயம் - 15
பூண்டு - 3 பல்
தக்காளி - 1
புளி - 2 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் விழுது - 1/2 கப்
செய்முறை:
முதலில் பாகற்காயின் விதைகளை நீக்கி விட்டு அதனை சிப்ஸ்ஸாக நறுக்கவும். கசப்பு போக சிறிது மோரில் 30 நிமிடம் வைத்த பின் கழுகவும்.
எண்ணெயில் பாகற்காயை நன்கு வதக்கிக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயில் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து வரிசையாக வதக்க கொடுத்துள்ளவற்றை வதக்கவும். வதக்கி வைத்த பாகற்காய் சேர்த்து, புளிக்கரைசல் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
பாகற்காய் வெந்ததும் தேங்காய் விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.