பாகற்காய் குழம்பு (7)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 3 (சுமாரான அளவு)

வெங்காயம் - 1

தக்காளி - 1

மிளகு - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1 மேசைக்கரண்டி

தனியா - 2 மேசைக்கரண்டி

பூண்டு - 4 பல்

மிளகாய் வற்றல் - 4 (காரத்திற்கு தகுந்தாற் போல்)

புளி - எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லிதழை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயத்தை தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாகற்காயை அரைவட்டவடிவ வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், மிளகு சேர்த்து வதக்கவும். மிளகு வெடிக்க ஆரம்பிக்கும் போது தனியா, சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து நறுக்கி வைத்திருக்கும் பாகற்காய் சேர்த்து வதக்கவும்.

பிறகு புளியை கரைத்து ஊற்றி பின் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கெதிக்க விடவும்.

காய் நன்கு வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க விடவும். பிறகு பாத்திரத்தில் மாற்றி கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: