பாகற்காய் குழம்பு (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 2

வெங்காயம் - 1

தக்காளி - 2

புளி - எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

கரம் மசாலாதூள் - 1 தேக்கரண்டி

துருவிய தேங்காய் - ஒரு சிறிய கப்

கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

வெல்லம் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாகற்காயை வட்டமாக நறுக்கவும். ஊற வைத்த புளியை கரைத்து வைக்கவும்.

வெங்காயத்தை நீளமாகவும் தக்காளியைப் பொடிப்பொடியாகவும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றில் வெங்காயம், தக்காளி சேர்த்து சிறிது வதக்கவும்.

பொடி வகைகளை சேர்த்து கிளறவும்.

பச்சை வாசனை போனதும் பாகற்காயை சேர்க்கவும்.

புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு வேக வைக்கவும்.

அதில் வெல்லம் மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்

குறிப்புகள்: