பாகற்காய் குழம்பு (10)
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பாகற்காய் - 1/4 கிலோ
கருவடாம் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலை
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - 2 சதுரகட்டிகள்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி மற்றும் பாகற்காய் நறுக்கி கொள்ளவும்.
ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கருவடாமை போடவும்.
வெடித்ததும் கறிவேப்பிலை, பூண்டு மற்றும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள பாகற்காய் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். புளியை கெட்டியாக கரைத்து அதில் ஊற்றவும்.
கொதி வந்ததும் வெல்லத்தை பொடி செய்து போடவும். காய்கறி வெந்து குழம்பு சுண்டியவுடன் இறக்கி பரிமாறவும்.