பாகற்காய் குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 1
சின்ன வெங்காயம் - 1 கப் + தாளிக்க 3
வர மிளகாய் - 3
தனியா - 3 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
மிளகு - 3
கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
பட்டை - மிகச் சிறிய துண்டு
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கிராம்பு - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
தக்காளி - 1
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
தேங்காய் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, வெள்ளை உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பொன்னிறமானதும் சின்ன வெங்காயம், வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தனியா, சீரகம், மிளகு போட்டு வதக்கவும்.
வதக்கியவற்றோடு பட்டை, சோம்பு, கிராம்பு, தேங்காய், பொட்டுக் கடலை, புளி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள்வும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, தக்காளி, சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, நறுக்கிய பாகற்காயை போட்டு அரைவேக்காடு வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
குக்கரில் வைத்தால் 2 விசில் வரும் வரை வைக்கவும்.
இட்லி,தோசை,சாதம், சப்பாத்திக்கு ஏற்றது.