பலாக்கொட்டை மசாலாக்கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பலாக்கொட்டை - 25

சின்ன வெங்காயம் - 10

தேங்காய் - 1

இஞ்சி - சிறு துண்டு

பச்சை மிளகாய் - 4

காய்ந்த மிளகாய் - 10

தனியா - 3 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் வறுத்து நைசாக அரைக்கவும். தேங்காயை தனியே அரைத்து வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.

பலாக்கொட்டையை தோல் உரித்து, சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவும்.

பலாக்கொட்டை வெந்ததும், அரைத்த மசாலா, தேங்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

வாணலியில் எண்ணெயை விட்டு காய்ந்தவுடன், கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.

கொதிக்கும் குழம்பில் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: