பருப்பு உருண்டை குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப் (ஊறவைத்தது)

இஞ்சி - 1 அங்குலம் அளவு

பூண்டு - 5 பல்

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 30

பச்சை மிளகாய் - 2

சோம்பு - 1 தேக்கரண்டி

புளி - 1 கோலி அளவு

தக்காளி - 2

வெந்தயப் பொடி - 1/2 தேக்கரண்டி

பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி

கடுகு, உளுந்து - தாளிக்க

கறிவேப்பிலை - 1 இனுக்கு

எண்ணைய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம்பருப்புடன், இஞ்சி, பூண்டை சேர்த்து கொரகொரவென அரைக்கவும்.

அதனுடன் வெங்காயத்தில் பாதி, பச்சைமிளகாய், சோம்பு எல்லாம் சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைக்கவும்.

வேறு வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து பெருங்காயத்தூள், வெந்தயப்பொடி போட்டு மீதியுள்ள வெங்காயம், தக்காளி எல்லாம் போட்டு நன்கு வதக்கி சிவந்ததும் சாம்பார் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதித்ததும் வெந்த உருண்டைகளை போட்டு கொதித்து குழம்பு பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: