பருப்பு உருண்டை குழம்பு

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உருண்டைக்கு:

துவரம் பருப்பு - 250 கிராம்

சின்ன வெங்காயம் - 10

தேங்காய் துருவல் - 1/4 மூடி

காய்ந்த மிளகாய் - 3

பூண்டு - 4 பல்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

குழம்புக்கு:

சின்ன வெங்காயம் - 200 கிராம்

தேங்காய் துருவல் - 1/2 மூடி

கசகசா - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 6

பூண்டு - 4 பல்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

புளி - ஒரு பெரிய எழுமிச்சம் பழ அளவு

கறிவேப்பிலை - சிறிது

வெல்லம் - ஒரு கோலி அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருண்டை செய்ய:

துவரம்பருப்பை 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, உப்பு, சோம்பு, மிளகாய் சேர்த்து, வடைக்கு அரைப்பது போல் கரகரப்பாக, கெட்டியாக அரைக்கவும்.

வெங்காய, கறிவேப்பிலை, பூண்டை பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்க்கவும்.

தேங்காய் துருவலையும் அத்துடன் சேர்த்து, பிசைந்து, ஒரு எழுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். (சும்மாவே இந்த உருண்டைகளை சாப்பிடலாம்)

குழம்பு செய்ய:

புளியை 1 தம்ளரில் ஊற வைத்து, கரைத்து வடி கட்டவும்.

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய், சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

ஆறிய பின், தேங்காய், கசகசா, தனியா தூள் சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரைத்த விழுதை புளித்தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, பூண்டு, கறிவேப்பிலை தாளித்து வதக்கவும்.

புளிக்கரைசலை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும் உருண்டைகளை போட்டு 5 நிமிடம் வேக விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: