பருப்பு உருண்டை காரக்குழம்பு
0
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
மிளகாய் வத்தல் - 5
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
எண்ணை - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம்பருப்பை நன்கு கழுவி ஒருமணி நேரம் ஊறவைத்து, மிளகாய், கொஞ்சம் உப்பு சேர்த்து மிக்சியில் வடை மாவு பக்குவத்தில் கெட்டியாக அரைத்து சிறு நெல்லிக்காய் அள்வு உருண்டைகளாக உருட்டி வக்கவும்.
கடாயில் எண்ணை ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து புளியை கரைத்து விடவும்.தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
புளி வாசனை போக கொதித்ததும் செது வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளை சேர்க்கவும்.
உருண்டைகள் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.