பத்தியக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - எலுமிச்சை அளவு

சுண்டைக்காய் வற்றல் - 15

மிளகா வற்றல் - 3

சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறி வேப்பிலை - சிறிதளவு

பெருங்காயம் - சிறிதளவு

நல்லெண்ணை - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணை ஊற்றி,கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு தாளித்து, பொரிந்ததும், சுண்டைக்காய்,பெருங்காயம் மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பார்பொடி, உப்பும் சேர்த்து வதக்கி புளியை நீர்க்க கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து வற்றியதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: