பச்சை மொச்சைக்குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை மொச்சை - 200 கிராம்

வெங்காயம் - 50 கிராம்

பூண்டு - 6 பல்

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 4

மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி

மல்லிப்பொடி - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

சோம்பு, சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

பட்டை - 1

கிராம்பு - 1

சோம்பு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

தேங்காய் - 2 சில்

புளி - ஒரு கொட்டைப்பாக்களவு

செய்முறை:

பச்சை மொச்சை பயறை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு, கிராம்பு, வெந்தயம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.

புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். உப்பு சிறிது சேர்க்கவும்.

தேங்காயை ஒரு பூண்டு பல் சேர்த்து அரைத்து குழம்பு கொதித்தவுடன் ஊற்றவும். குழம்பு கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

குறிப்புகள்: