பச்சை பயிறு கிரெவி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை பயிறு - 500 கிராம்

பெரிய வெங்காயம் - 4

பெரிய தக்காளி - 3

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மசாலா பொடி - 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

கொத்தமல்லி தழை - சிறிது

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

பச்சை பயிறை 4 அல்லது 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

தண்ணீரை வடிய விட்டு குக்கரில் வேக வைக்கவும்.

ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும்.

வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

வாணலியை அடுப்பில் வைத்து 3 மேஜைக் கரண்டி எண்ணெய் விட்டு சூடானவுடன்

கடுகு, சோம்புதாளித்து,அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை

சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

வதங்கிய தக்காளி வெங்காயத்துடன்,மிளகாய் தூள்,மஞ்சள் பொடி,கரம் மசாலா பொடி,

உப்பு, சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

இவைகளுடன் வேகவைத்த பயிறை கலக்கவும்.

சிறிது தண்ணீர் சேர்த்து 5நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஒரு அருமையான சைட் டிஷ் தயார்.