பச்சைப்பயிறு குழம்பு
தேவையான பொருட்கள்:
பச்சை பயிறு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
சோம்பு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
மிளகாய் வற்றல் - 4
தனியா - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 (அல்லது) சின்ன வெங்காயம் - 7
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
பருப்பை வாசம் வர வறுத்து நீரில் கழுவி பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியுடன் 2 கப் நீர் விட்டு குக்கரில் ஒரு விசில் 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய அனைத்தையும் (தேங்காய் தவிர) ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து எடுக்கவும்.
இதை தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அதே பாத்திரத்தில் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
இதில் வேக வைத்த பருப்பு கலவை, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.