தேங்காய் பூண்டு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய தக்காளி - 2

பூண்டு - 15 பல்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

சீரக தூள் - 1/4 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க

கருவேப்பிலை, கொத்தமல்லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காய், சோம்பு தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.

பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின் வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.

வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து உடைய வதக்கவும்.

இதில் எல்லா தூள் வகைகளும் சேர்த்து பிரட்டி, உப்பு, அரைத்த மசாலா கலந்து குழம்பு பதத்துக்கு கொதிக்க வைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: