தேங்காய்பால் குழம்பு (1)
0
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1/2 மூடி
பெரிய வெங்காயம் - பாதி
தக்காளி - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
புதினா - 4 இலைகள்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - தேவையான அளவு
கருவேப்பில்லை - தேவையான அளவு
மல்லி தூள் - சிறிதளவு
மஞ்சள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேங்காயை கெட்டியாக பால் எடுக்க வேண்டும்.
பிறகு வெஙகாயம், தக்காளி, இஞ்சி பூண்டு முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி விடவும்.
பிறகு பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு, புதினா, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வரிசையாக வதக்கவும்.
பிறகு மல்லி, மஞ்சள், மிளகாய் தூள் போன்றவற்றை போடவும்.
நன்கு வதங்கியபின் தேங்காய்பாலை ஊற்ற வேண்டும்.
ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.