தேங்காய்பால் குழம்பு
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1
பச்சைமிளகாய் - 4
கடலைபருப்பு - 1 மேசைக்கரண்டி
அரிசி - 1 மேசைக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
எலுமிச்சைபழம் - 1 பெரியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையானஅளவு
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை -சிறிது
செய்முறை:
தேங்காயைதுருவி மிக்ஸியில் அரைத்து பால்எடுக்கவும்,பாலில் அதிகம் தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைபருப்பு, அரிசி, பச்சைமிளகாய், இஞ்சி என்று வரிசையில் வறுத்து அரைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து தேங்காய்பாலில் சேர்க்கவும்.
மஞ்சள்தூள், உப்பையும் சேர்க்கவும். அரைத்த விழுதையும் சேர்த்துகலக்கவும்.
இதை அடுப்பில், சிறியதீயில் லேசாக நுரைத்துவரும்வரை வைத்து இறக்கவும்.
(குழம்பு கொதிக்ககூடாது)
எலுமிச்சைசாறு சேர்த்து கலக்கவும்.
கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கலாம்.