தேங்காய்க் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக அரிந்த வெங்காயம் - 1/2 கப்

பொடியாக அரிந்த தக்காளி - 2 கப்

தேங்காய்த் துருவல் - 2 கப்

துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

கொத்தமல்லித் தூள் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியில் நல்லெண்ணையை ஊற்றி சுட வைக்கவும். அது காய்ந்ததும் கடுகைப் போடவும்.

அது வெடித்ததும் வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

தேங்காயை இஞ்சியுடன் நன்கு அரைக்கவும். அதை சிறிது தண்ணீருடனும், இதர தூள்களுடனும் சேர்த்து கொதிக்கவிடவும்.

குழம்பு நன்கு கொதித்ததும் கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: