தீயல் குழம்பு
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 1 கப்
சின்ன வெங்காயம் - 20
முருங்கைக்காய் - 1
பூண்டு - 10
மிளகாய் பொடி - 3 தேக்கரண்டி
மல்லி பொடி - 1 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கீற்று
புளி - ஒரு கோலிகுண்டு அளவு
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முருங்கைக்காயை ஒரு அங்குல துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி அதையும் கீறி வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும். பூண்டை தோலுரித்து 2 துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் தேங்காய் துருவலை அதில் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்.
அதை எடுத்து வைத்துவிட்டு மிளகுப்பொடி, மல்லிப்பொடி இரண்டும் போட்டு அதையும் நன்றாக வறுக்கவும், கலர் மாறி வாசம் வரும்போது இறக்கி விடவும். கருகிவிடக்கூடாது கவனம் தேவை, வறுத்தவற்றை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். புளியை ஒரு கப் சுடுத்தண்ணீரில் ஊற வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பூண்டு, சின்னவெங்காயம் இரண்டும் போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் முருங்கைக்காய் போட்டு வதக்கி, அதில் அரைத்த விழுதையும் கலந்து 4 கப் தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்தவுடன் புளியை கரைத்து வடிகட்டி கலவையில் சேர்த்து, உப்பு போட்டு குழம்பு வற்றி கெட்டியாக வரும் போது இறக்கி பரிமாறவும் விடவும்.
குறிப்புகள்:
சாதத்துடன் பரிமாறவும். இந்த குழம்பு காரம் அதனால் காரம் இல்லாத பருப்பு கூட்டுக்கறி நல்ல இருக்கும்.