திருநெல்வேலி சொதி (1)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், காரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் - 2 கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 12
பூண்டு - 10 பல்
இரண்டாம் தேங்காய் பால் - 4 கப்
முதல் தேங்காய் பால் - 1 கப்
வேக வைத்த பாசிபருப்பு - 1 1/2 கப்
கரகரப்பாக அரைத்த பூண்டு, ஜீரகம் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை - 1
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்க
செய்முறை:
சின்ன வெஙாயம்,பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
மிளகாயை கீறி கொள்ளவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு உளுந்து தாளித்து,கறிவேப்பிலை,சின்ன வெங்காயம்
பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர்,நறுக்கிய காய்களை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இரண்டாம் பால் சேர்த்து வேகவிடுங்கள்.
பின்னர்,காய் வெந்ததும் வேக வைத்த பாசிபருப்பை முதல் பாலில் கலந்து குழம்பில் சேர்க்கவும்.
கொதி வந்ததும்,பூண்டு,ஜீரக அரவை,சேர்த்து ஒரு நிமிடம் கழித்து எலுமிச்சைசாறை சேர்த்து ,உப்பயும் சேர்த்து அடுப்பை உடனே அணைக்கவும்.