தால் தர்க்கா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மூங் தால் - 1/4 கப்

துவரம் பருப்பு - 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி

நறுக்கிய வெங்காயம் - 1

தோல் சீவி நறுக்கிய தக்காளி - 1

பூண்டு - 2 பல் (நறுக்கவும்)

கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி

நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிது (அலங்கரிக்க)

வெண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மூங் தாலையும், துவரம் பருப்பையும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து 20 நிமிடம் வேக விடவும்.

வேறு ஒரு வாணலியில் வெண்ணெயை உருக்கி அதில் சீரகம் போட்டு பொரிந்ததும் பெருங்காயப் பொடி சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் இளம் பொன்னிறத்தில் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் கறிவேப்பிலை இரண்டு கொத்து இலையை தேவையெனில் சேர்க்கலாம்.

பிறகு வேக வைத்த பருப்பையும் இதனுடன் சேர்த்து மேலும் வதக்கி பருப்பு இனியும் வேக வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து இதனுடன் கொதிக்க விடவும்.

பருப்பு வெந்ததும் இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: