தயிர் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தயிர் - 1 கப்

காரட் துருவல் - 2 மேசைக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

மிளகு - 1/4 தேக்கரண்டி

பூண்டு - 2 பல்

பச்சை மிளகாய் - 3

கருவேப்பிலை - 2

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெய் சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து காரட் சேர்த்து வதக்கவும்.

மூன்று நிமிடத்தில் இறக்கி உப்பு சேர்த்து கட்டியில்லாமல் அடித்துள்ள தயிரில் கொட்டவும்.

சீரகம், மிளகு, பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலையை ஒன்னும் பாதியுமாக இடித்து வைத்துக் கொள்ளவும்.

இந்த கலவையை தயிரில் கலக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதில் காரட்டுக்கு பதிலாக பீட்ரூட் கூட சேர்த்து செய்யலாம்.