தயிர் குழம்பு





தேவையான பொருட்கள்:
தயிர் - 1 கப்
கேரட் (அல்லது) பீட்ரூட் - 1
சீரகம் - கால் தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
பூண்டு - 2 பற்கள்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 2
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பீட்டரால் தயிரைக் கட்டிகளில்லாமல் நன்கு அடித்துக் கொள்ளவும்.
கேரட்டைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
சீரகம், மிளகு, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை ஒன்றும் பாதியுமாக இடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும்.
அதனுடன் கேரட் துருவல் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
கேரட் நன்கு வதங்கியதும், இடித்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கியவற்றை அடித்து வைத்துள்ள தயிரில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
சுவையான தயிர் குழம்பு தயார்.
குறிப்புகள்:
தக்காளி சாதம், புலாவ் வகைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.