தட்டப்பயறு குழம்பு





தேவையான பொருட்கள்:
தட்டப்பயறு (காராமணி பயறு) - 100 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கத்தரிக்காய் - 2
பூண்டு - 4
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள் - தலா 1/2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கடுகு, சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் விழுது - 2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முளைகட்டிய தட்டப்பயறுடன் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பாதி வெந்தவுடன் அதில் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், பூண்டு சேர்த்து வேக வைக்கவும்.
வெந்ததும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சோம்பு, சீரகத் தூள் மற்றும் புளிக் கரைசலை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து குழம்பில் சேர்க்கவும். தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கி கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.